உலக நாடுகளில் அதிக வெள்ள அபாயம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்புகள் அதிக வெள்ள அபாயத்துடன் இருக்கிறது என்று தேசிய வெள்ள திட்டக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனிடையே வெள்ளபெருக்கு ஏற்பட்டால் மக்களின் உயிர்கள் மட்டுமல்லாமல் வீடுகள், விலைமதிப்பான பொருள்கள், உணவு, உடை என பல பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், இந்தியா முழுவதும் ஏற்படும் வெள்ள பெருக்கின் அபாயத்தை ஒரு நாள் முன்னதாகவே கணிக்கும் வகையில் ‘ ஃப்ளட்வாட்ச் ‘ (FloodWatch) என்ற செயலியை மத்திய நீர் வளத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ‘ஃப்ளட்வாட்ச்‘ (FloodWatch) ஆனது நாட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து 7 நாட்கள் வரையிலான முன்னறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்குகிறது.
Also Read : 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே! அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! சீக்கிரம் பாருங்க…
இந்த புதிய செயலி மூலம் இனி நாடு முழுவதும் வெள்ளபெருக்கு சூழ்நிலைகளை சரிபார்க்க முடியும். இந்த ‘ ஃப்ளட்வாட்ச் ‘ (FloodWatch) ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியில் குரல் மூலமாகவும் தகவலை தெரிந்து கொள்ள முடியும் என்று மத்திய நீர் வளத்துறை தெரிவித்துள்ளது.