நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட தேவையான கருவிகளை வாங்குவதற்காக மத்திய அரசு பி.எம். கிசான் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.2 ஆயிரம் என்ற வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த பி.எம்.கிசான் திட்டமானது கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்த தவனைத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், தவணைத்தொகை உயர்த்தி வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ. ரூ. 8 ஆயிரம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதனால் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.