குறைந்த செலவில் நிறைந்த பணம்! LIC நிறுவனத்தில் ரூ.150 செலுத்தி! ரூ.8 லட்சத்திற்கும் மேல் பெறலாம்!

LIC Best Policy for Child

LIC Jeevan Tarun Policy Plan Details: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் குழந்தைகளுக் கான ‘ஜீவன் தருண்’ என்ற பாலிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக எல்ஐசி நிறுவனம் இந்த ‘ஜீவன் தருண்’ என்ற பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வில் ஏற்படும் பல செலவினங்களுக்காக பல்வேறு வகைகளில் பணத்தை சேமித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரிஸ்க் இல்லாமல் முழு பாதுகாப்புடன் தங்களின் குழந்தைகளுக்கு குறைந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க LIC-யில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

Full of money at low cost Paying Rs.150 in LIC Jeevan Tarun Policy Plan Details Get more than Rs.8 lakhs

LIC Jeevan Tarun Policy Plan Details Get more than Rs.8 lakhs
LIC Jeevan Tarun Policy Plan Details Get more than Rs.8 lakhs

LIC Jeevan Tarun Policy Plan Details 2022: பிறந்து 90 நாட்கள் ஆன குழந்தைகள் முதல் 12 வயது நிரம்பியவர்கள் வரை இத்திட்டத்தில் சேரலாம். பிள்ளைகளின் வயது 25 ஆகும் போது பாலிசி முதீர்வடையும். ஜீவன் தருண் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை. குறைந்தபட்ச காப்புத் தொகை ரூ.55 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். அதிகபட்ச காப்புத் தொகைக்கு உச்ச வரம்பு இல்லை.

குழந்தையின் கல்விச் செலவுக்கான தொகையை பாலிசிதாரரே முடிவு செய்யலாம். இதன்படி, 20 வயது முடிவில் தொடங்கி 24 வயது வரை 5, 10 மற்றும் 15 சதவீத அளவில் காப்புத் தொகையை திரும்பப் பெறலாம். அத்துடன் முதிர்வு காலம் முடிவடைதற்குள் உங்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்காக பணத்தேவை ஏற்பட்டால் இடையில் பெறுவதற்கான வசதிகளும் உள்ளது. முதிர்வுத் தொகையை குழந்தையின் 25-வது வயதில் மொத்தமாக பெற்று மேற்ப்படிப்பு, அசையும் அசையா பொருட்கள் மற்றும் திருமண செலவுக்கும் பயன்படுத்தலாம்.

இந்த முதிர்வு காலத்தின் முடிவில் உங்களுக்கு முதலீடு செய்த தொகையுடன், போனஸ் தொகை, குறைந்தபட்ச உறுதித் தொகை, லாயல்ட்டி தொகை உள்ளிட்டவை கிடைக்கும். அதன்படி முதிர்வு காலத்தின் கடைசியில் போனஸ் தொகையாக ரூ. 2,47,000யும், குறைந்தபட்ச உறுதித் தொகையாக ரூ.5 லட்சமும், லாயல்ட்டி நன்மையாக ரூ.97,500 ரூபாயும் கிடைக்கிறது. இவ்வாறாக இத்திட்டத்தில் முதலீடு செய்வதால் உங்களின் குழந்தைகளின் எதிர்கால செலவினத்தை அச்சமின்றி எதிர்கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு கோடிக் கணக்கில் சொத்து சேர்க்க வேண்டும் என்பதனை விட, சரியான கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்று அனைத்தும் சரியாக நடந்தாலே போதும் என்பது தான் பல குடும்பங்கங்களில் உள்ள கனவு.

எல்ஐசி ஜீவன் தருண் பாலிசியில் இணைய முகவரி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், கேஓய்சி ஆவணங்கள் என அனைத்தும் தேவை. இது குறித்த முழு விவரங்களையும் அறிய www.licindia.in/Products/Insurance-Plan/jeevan-tarun பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தைகளின் நீண்டகால எதிர்கால தேவை என்பதில் கருத்தில் கொண்டு, சரியான நிதி ஆலோசகரின் ஆலைசனையுடன் இதுபோன்ற திட்டங்களில் இணையலாம்.  Jobs Tamil LIC Jeevan Tarun Policy Plan Details

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!