Today Political News 2023

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதி ஆகிய தேகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் முக்கியமான அதிபர்களும், தலைவர்களும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இதில், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்தார்.
Also Read>> அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறி செல்கிறார் கோகோ காப்…!
இந்நிலையில், ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் இசை மற்றும் கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா கலை நிகழ்சிகளை கண்டு மகிழ்ந்தார். அப்போது, நாட்டுபுற கலைஞர்களுடன் கிறிஸ்டலினா ஜார்ஜிவா நடனமாடி மகிழ்ச்சியடைந்தார். தற்போது இவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.