தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி வரும் ஒரு சில தினங்களுக்கு முன் மக்களிடிம் விநாயகர் வைக்கும் குழந்தைகள் வசூலிக்க செல்வார்கள்.
இதனைதொடர்ந்து, விநாயகர் வைத்தவுடன் 3 வது நாள் அல்லது 5 வது நாளில் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள். அதன்படி, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் சிலைகளை தயாரிக்கும் பணிகள் திருத்தணியில் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, சித்தூர் சாலை, அரக்கோணம் சாலை, பை-பாஸ் சாலை, ஆகிய இடங்களில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Also Read : நீங்களும் அரசு தரும் ரூ.1000 வாங்கணுமா..? அப்போ இதையெல்லாம் கரட்டா பண்ணிட்டீங்கலான்னு செக் பண்ணிக்கோங்க…
மேலும், சிலை தயாரிப்பாளர்கள் பேசுகையில், தயார் செய்யும் விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுசூழலுக்கு கேடு விளைக்காதபடி ரசாயணம் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும். அதன்படி, இந்த சிலைகள் 1 அடி முதல் 12 அடி வரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் விலை 100 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் வரை உள்ளது.