விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எள்ளு பூரண கொழுக்கட்டை

Special Sesame Purana kolukattai: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விதவிதமான பலகாரங்கள் பிள்ளையாருக்கு படைத்து வழிப்படுவது நமது வழக்கம். இதில் முதன்மையானதும் விநாயகருக்கு மிகவும் பிடித்து கொழுக்கட்டை என்று அனைவரும் அறிவோம். இதோ உங்களுக்காக எளிய முறையில் எள் பூராண கொழுக்கட்டை எப்படி செய்யறதுன்னு இப்பக்கத்தில் பார்க்கலாம்…

Ganesha Chaturthi Special Sesame Purana kolukattai

Special Sesame Purana kolukattai
Special Sesame Purana kolukattai

தேவையான பொருட்கள்: எள் பூரண கொழுக்கட்டைக்கு

அரிசி மாவு – ஒரு கப்
கருப்பு எள் – கால் கப்
வெல்லம் – கால் கப் (துருவியது)
ஏலக்காய்த் தூள் – கால் தேக்கரண்டி
துருவியத் தேங்காய் – 2 மேசைக் கரண்டி
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை: Special Sesame Purana kolukattai

பாத்திரத்தில் கருப்பு எள்ளை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வடிகட்டி துணியில் பரப்பி உலர வைக்கவும்.

பிறகு, அடுப்பை பற்றவைத்து அதன் மீது வானலியில் உலர்ந்த எள்ளை சேர்த்து வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுக்கவும். .

அத்துடன் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லம் கரைந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கவும். எள் பூராணம் தயார்.

பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, நல்லெண்ணெய், தேவையான அளவு சுடு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும். பின், ஒரு பிடி மாவை எடுத்து உருண்டை செய்து நமக்கு விருப்பமான அச்சு வடிவங்களில் வைத்து அழுத்தவும்.

நடுவில் எள் பூரணம் வைத்து முழுமையாக மூடிவிடவும். பின்பு இந்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.

இப்போது தயார் ஆகிவிட்டது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எள்ளு பூரண கொழுக்கட்டை இதன் சுவையே தனித்து இருக்கும், இது மிகவும் உடல் நலத்திற்கு நல்லது.

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here