முதல்வர் அறிவிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்மொழி கட்டாயம்..!

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழக பாடத்திட்டத்தின்படியே 1 லிருந்து 12 ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளில் கொண்டு வரப்படுவதாக மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியாகினது. அதுமட்டுமல்லாமல், கல்வித்துறை சார்பாக தமிழ் மொழிப் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் விருப்ப பாடமாக மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

get details here Chief Ministers announcement Tamil language is compulsory in CBSE syllabus..!

அதற்கு முன்னதாக மாணவர்களுடைய விருப்பப்பாடமாக தமிழ் மொழியை மட்டுமே தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே புதுச்சேரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சமூக நல அமைப்பாளர்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட இருந்தது. இதனையடுத்து தற்போது ஒரு புதிய அறிவிப்பை புதுச்சேரி மாநில முதல்வர் அறிவித்திருக்கிறார். அதாவது, தமிழ் மொழிப் பாடத்திட்டத்தை புதுச்சேரியில் இயக்கப்பட உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN