வீடுகளில் சமீப காலமாக பல்வேறு இடங்களில் 2 மாதங்களை கடந்த பின்னர் ரீடிங் எடுப்பதாக புகார் எழுப்பி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் அரசு முனைப்புடன் மின் மீட்டர்களை “ஸ்மார்ட் மீட்டர்” ஆக மாற்றும் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இதனை மின்கணக்கெடுப்பு செய்யாமல் தாமாகவே மின்சாரத்தை கணக்கீடு செய்து பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாக கட்டண விவரங்களை அனுப்பும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் “ஸ்மார்ட் மீட்டர்” பொருத்துவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மின்சார வாரியம் புதிய டெண்டர் கோரப்பட்டுள்ள ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பராமரிப்பு மற்றும் பணி ஆகிய அனைத்து பணியினையும் மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரியம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
