ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம்..! வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் குறிப்பிட்ட பணத்தை பிடித்து அதனை அவர்களின் ஓய்வூதிய காலங்களில் சம்பளமாக வளங்குகிறது. இதனை மத்திய அரசின் கீழ் செயல்படும் EPFO அமைப்புதான் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்திலிருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு அதிலிருந்து 8.33% ஓய்வூதியத்திற்காக செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதியம் 15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

get details here New change in pension plan..! Important announcement!

மத்திய அரசின் EPFO அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் சென்று அறிவித்தது. அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்பொழுது ஜூன் 26 கடைசி நாளாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாத ஓய்வூதியத்திற்கான அடிப்படை பார்முலாவை மாற்றுவது தொடர்பாக EPFO அமைப்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெறுவார்கள். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN