மத்திய அரசு வேலைக்கு அப்ளை பண்ண ரெடியா இருங்க! மாத சம்பளம் 47,838 ரூபாய் தராங்களாம்!

மத்திய அரசு வேலைக்கு அப்ளை பண்ண ரெடியா இருங்க! மாத சம்பளம் 47,838 ரூபாய் தராங்களாம்!

சென்னையில் உள்ள பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) Child Psychologist பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு சைல்டு சைக்காலஜிஸ்ட் இடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.

ALSO READ : நம்ம சென்னையிலே மத்திய அரசு வேலை வேண்டுமா? அப்ப வாக்-ன்-இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! உடனே வேலையில் சேர்ந்துடுங்க!

குழந்தை உளவியலில்(Child Psychology ) பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 01-ஜன-2024 இன் படி குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயது டையவர்கள் இந்த பதவிக்கு அப்ளை பண்ண முடியும். மத்திய அரசின் இந்த வேலையை சென்னையிலேயே செய்யலாம்.

ESIC யின் Child Psychology வேலைக்கு இண்டர்வியூ வைத்து தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலில் தேர்வாகும் நபர் மாத ஊதியமாக 47,838 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையில்லை என்பதால் விண்ணப்பக்கட்டணம் இல்லை. அதிகாரபூர்வ தளமான https://www.esic.nic.in -ல் இந்த வேலை பற்றிய தவகல்கள் உள்ளது.

எனவே விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக இன்டர்வியூக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்

இன்டர்வியூ நடைபெறும் தேதி : 29/01/2024

இன்டர்வியூ நடைபெறும் இடம் :

ESIC Medical College and Hospital, KK Nagar,
Chennai-600078.

சென்னையில் உள்ள பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தின் Notification link and Application Form லிங்கை கிளிக் செய்து இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top