அடுத்த 3 மாதத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு பரிசு பொருட்கள்..! சென்னை மெட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

Gift items for metro commuters for the next 3 months Announcement of Chennai Metro Company

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பிஷியாக இயங்கி வரும் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகத்தான் உள்ளது. இத்தகைய மக்களின் சிரமத்தை போக்க சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ சேவை மூலம் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கியது முதல் தற்போழு வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு மெட்ரோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

ALSO READ : தமிழக மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க… தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

அந்த வகையில், மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி பயணம் செய்பவர்களுக்கு தற்பொழுது சிறப்பு பரிசு பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுபொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ​இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பாரத ஸ்டேட்வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top