கில், சிராஜ் முதலிடம் : தரவரிசையில் கலக்கும் இந்திய அணி வீரர்கள்!

கில், சிராஜ் முதலிடம் தரவரிசையில் கலக்கும் இந்திய அணி வீரர்கள்!
கில், சிராஜ் முதலிடம் தரவரிசையில் கலக்கும் இந்திய அணி வீரர்கள்!

நடப்பு ஆண்டுகக்ன உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியா, இந்திலாந்து உள்ளபட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப்பபோட்டியின் முதல் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த 10 அணிகளும் தலா 1 முறை மோதி 9 லீக் போட்டிகளில் விளையாடும். இந்த உலக கோப்பை லீக் தொடரானது தற்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

இந்த போட்டியில் அதிக வெற்றி புள்ளிகளை எடுத்து இந்தியா முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், மூன்றாவதாக ஆஸ்திரேலியா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நான்காவது இடத்தை பிடிக்க நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியிட்டு வருகினறனர்.

உலக கோப்பை போட்டியின் லீக் போட்டிகள் தற்பொழுது முடிவடைய உள்ள நிலையில், வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் என்ற வீரர்தான் முதலிடத்தில் இருப்பார். ஆனால், தற்பொழுது அவரை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மான் கில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 830 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபர் அசாம் 824 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

ALSO READ : தீபாவளி 2023 : நாளை முதல் (09.11.2023) சிறப்பு பஸ்கள் இயக்கம்!

மேலும், இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி 770 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திலும், ரோஹித் சர்மா 739 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்திலும் உள்ளனர். பேட்டிங் தரவரிசை போலவே பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. பந்துவீச்சு தரவரிசை பட்டியலை பொறுத்தவரையில், இந்திய அணியின் வீரரான முகமது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 709 என்ற புள்ளிகளுடன் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளார். அதன்பிறகு, கேசவ் மகாராஜ் 694 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆடம் ஸாம்பா 662 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை பொறுத்தவரையில், 236 புள்ளிகளை பெற்று மேக்ஸ்வெல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த உலக கோப்பை போட்டியின் இறுதியில் இன்னும் அதிகமான வீரர்கள் இந்த தரவரிசை பட்டயலில் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்