காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு புதுவிதமான கோவா ஸ்பெஷல் கோன் இட்லி! இதோ உங்களுக்காக ஈஸியான ரெசிபி..!

Goa Special Cone Idli Recipe In Tamil

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவு என்றுதான் சொல்லவேண்டும். இந்த உணவை மூன்று வேளைகளிலும் ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும். அதில் காலை உணவை யாராலும் தவிர்க்க முடியாது. சரியான காலை உணவு சாப்பிடவில்லை என்றால் அன்றைய நாள் சோர்வாகவும், களைப்பகாவும் இருக்கும். பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் காலை உணவு என்றால் இட்லி, தோசை போன்ற வகைகள் இல்லாமல் இருக்க முடியாது. செய்வதற்க்கு மிகவும் எளியது என்பதற்காகவே பெரும்பாலான மக்கள் இட்லியை செய்கின்றனர். தென்னிந்திய உணவு வகையில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. 90% மக்கள் இட்லியை காலை உணவாக உண்கின்றனர்.

ஒரு காலகட்டத்தில் பண்டிகை, திருவிழா நாட்களில் மட்டும் செய்யப்படும் இட்லி இன்று அனைத்து வீடுகளிலும் விரும்பி உண்ணும் காலை உணவாக மாறிவிட்டது. உலகில் இட்லி ஒரு சிறந்த சுவை மிகுந்த காலை உணவாக உள்ளது. ஏனெனில் ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால் அதில் கொழுப்பு சத்து இருக்காது என்பதே காரணம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக இட்லி உள்ளது. இதுவரை இட்லியை அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து அதை மாவாக அரைத்து தான் இட்லி செய்வோம். ஆனால் இன்று ஒரு புதுமையான கோவா ஸ்பெசல் கோன் இட்லியை செய்து பார்ப்போம்.

கோவா மற்றும் மங்களூரில் சில பகுதிகளில் இட்லி மாவுடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து செய்யபடுவது தான் கோன் இட்லி. சர்க்கரை மற்றும் தேங்காய் பால் இரண்டுமே உணவிற்கு சுவை கொடுக்கும். நீங்கள் தினந்தோறும் செய்யும் இட்லிக்கு பதிலாக இந்த புதுமையான கோவா ஸ்பெசல் கோன் இட்லி ரெசிபியை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1. அரசி -2 கப்

2. சர்க்கரை-3 டீஸ்பூன்

3. உளுந்தப்பருப்பு-முக்கால் கப்

4. தேங்காய் பால்-முக்கால் கப்

5. உலர் ஈஸ்ட்-ஒரு டீஸ்பூன்

6. உப்பு, தண்ணீர்-தேவையான அளவு

ALSO READ >உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பச்சை நிற உணவுகள் எதுன்னு தெரியுமா?

செய்முறை விளக்கம்:

Cone Idli Recipe
  • முதலில் இரு பாத்திரத்தில் அரசி மற்றும் உளுந்தப்பருப்பை குறைந்தது 4-5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இதை தொடர்ந்து அரிசி மற்றும் உளுந்த பருப்பு இரண்டையும் தனித்தனியாக எப்போதும் இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்து கொள்ள வேண்டும்.
  • மேலும் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய் பாலுடன் அரசி மாவையும், உளுந்த மாவையும் ஊற்றி நன்கு கலக்கி வைக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி தனியாக வைக்க வேண்டும்.
  • இதை தொடர்ந்து சிறிய பாத்திரத்தில் ஈஸ்ட், ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1\4 கப் வெதுவெதுப்பான நீரை சேர்த்து தனியாக வைக்க வேண்டும். பின்பு இந்த கலவையை மாவுடன் சேர்த்து சுமார் இரண்டு மணியிலிருந்து மூன்று மணிநேரம் மாவை புளிக்க விட வேண்டும்.
  • பின்பு மாவு புளித்த பிறகு வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி சுமார் 20 நிமிடம் ஆவில் வேக வைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான கோன் இட்லி தயார்.
  • தேங்காய்பால் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இட்லி கோவாவில் ஸ்பெஷலாக உள்ளது. இந்த இட்லி உடன் சட்னி, சாம்பார். சிக்கன் குழம்பு சேர்த்து சாப்பிடும் போது அதீத சுவை கிடைக்கும். காலை நேரத்தில் செய்யப்படும் உணவில் இந்த கோவா கோன் இட்லியை செய்து பாருங்கள். மேலும் ஆரோக்கியாமான காலை உணவாக இந்த கோன் இட்லி இருக்கும்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here