மீண்டும் எகிறிய தங்கம் விலை..! சவரன் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

Gold Price In Tamil People are shocked as the price of gold rose by Rs.120 per Sawaran today

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கத்தினை எதிர்கால தேவை அல்லது சேமிப்பிற்காக வாங்கி வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பாக ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின்பு நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலையானது படிப்படியாக உயரத் தொடங்கி தற்பொழுது உச்சத்தை தொட்டுள்ளது.

ALSO READ : சென்னையில் மீண்டும் மழை… அடுத்த 3 மணி நேரத்தில் மேலும் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!!

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினந்தோறும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை நேற்று ஒப்பிடுகையில் சவரன் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 835 க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46 ஆயிரத்து 680 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.80 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top