நகை வாங்க சரியான நேரம் வந்துவிட்டது! ஒரே நாளில் அதிரியாக குறைந்த தங்கம் விலை..!

Gold Price In tamil The price of gold fell dramatically today in a single day and made people happy

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்பாடு, கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் குழந்தை பிறப்பு முதல் கல்யாணம் வரை அனைத்திற்கும் தங்க நகைகள் எடுப்பது வழக்கமாக உள்ளது. ஒரு சிலர் தங்கத்தை அழகுக்காக வாங்கினாலும், மற்றும் சிலர் இதனை எதிர்கால சேமிப்பிற்காக வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடுத்தர மக்களின் சேமிப்புகளில் ஒன்றாக தங்கம் உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தங்கத்தின் விலையானது குறைவாக இருந்தது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தங்கத்தின் விலையானது படிப்படியாக உயரத் தொடங்கி தற்பொழுது ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அடிப்படையில் தினந்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ : சென்னையை அடுத்து ஆந்திராவை புரட்டி எடுத்த மிக்ஜம் புயல்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

அந்த வகையில், சென்னையில் இன்று(புதன்கிழமை) ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 815 க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46 ஆயிரத்து 520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.81 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top