புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! சவரன் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்ததால் பொதுமக்கள் வேதனை!!

Gold price reached a new peak 120 rupees per shaver has increased public anguish

தங்கத்தின் விலையானது கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கும் அளவிற்கு இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தின் போது பல்வேறு நாடுகளில் பொருளாதார சூழல் மிகவும் மோசமானதால் தங்கம் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினந்தோறும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையானது ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் இறங்குவதுமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தங்கத்தின் விலையானது சற்று அதிகரிகத்து காணப்படுவது வழக்கம். சென்னையில் நேற்று நிலவரப்படி 22 கேரட் ஆபரனத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 880 க்கும் சவரன் ஒன்றுக்கு ரூ.47 ஆயிரத்து 040 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ALSO READ : பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் ஷாருக்கானின் “டங்கி” திரைப்படம்..!

தங்கம் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.15 ஆதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்து 895 க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.47 ஆயிரத்து 160 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் இன்று (டிசம்பர் 26) 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 81 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top