குட் நியூஸ்! சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை! உறுதியளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அதில் முதல் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றார். தொடர்ந்து சிங்கப்பூரிலிருக்கும் தொழில் நிறுவனங்களுடைய அதிகாரிகளை நேற்று சந்தித்தார். அதுமட்டுமல்லாது, அவர்களுடன் ஆலோசனையையும் மேற்கொண்டார். அதனையடுத்து அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பாக 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை..

மேலும் சென்னையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின்போது நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறு அந்நாட்டினுடைய உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து அழைப்பு விடுத்தார். அந்த சந்திப்பின்போது இணைய பாதுகாப்பு குறித்து தமிழக முதல்வரிடம் அந்நாட்டு அமைச்சர் சண்முகம் கலந்துரையாடி ஆலோசனை மேற்கொண்டார்.

அதுமட்டுமல்லாது அமைச்சர் சண்முகம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழகத்தின் மதுரை மாவட்டத்திற்கு சிங்கப்பூரிலிருந்து நேரடியாக விமான சேவையை இயக்கப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்குப் பதிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இது பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN