ரேஷன் கார்டு வச்சிருக்க எல்லாருக்கும் மகிழ்ச்சியான செய்தி..! மிஸ் பண்ணாம படிங்க… இந்த செய்தி உங்களுக்காகவே!

Good news for everyone who has a ration card Dont miss it this news is for you read at www tn gov in

நாட்டில் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு உள்ளது. அந்த அளவிற்கு ஆதார் ஆட்டை மக்களின் இன்றியமையாத முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சேவை மற்றும் மாநில அரசின் சேவைகளை பெறவும் தற்பொழுது ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதார் தேவையை மக்களுக்கு உணர்த்த பல்வேறு துறைகளில் ஆதார் எண்ணை இணைக்க செய்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் 96 சதவீதம் மக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN