ரேஷன் கார்டு வச்சிருக்க எல்லாத்துக்கும் மகிழ்ச்சியான செய்தி! உடனே தெரிஞ்சிக்கோங்க..! தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! www.tn.gov.in

ரேஷன்கார்டு பற்றிய புதிய புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் மக்கள் அனைவரும் மிகவும் பயனடைகிறார்கள். அந்தவகையில் தற்போது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய செய்தி ஓன்று வந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மே மாதம் முதல் ஒரே நாடு, ஒரு ரேஷன் திட்டத்தின் மூலமாக, ‘மொபைல்’ ரேஷன் கடைகளை செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப் போகிறார்கள்.

அந்தந்த தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்க வேண்டும். அந்த வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொறுத்த வேண்டும். ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். மற்ற நேரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாகனங்களை வாடகைக்கு விட வேண்டும். இதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். அந்தந்த பகுதிகளில் மொபைல் ரேஷன் கடைகளை பிரித்து செயல்பட வேண்டும். அந்தந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் இந்த பணிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

‘மே மாதம் முதல் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மொபைல் ரேஷன் கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வீடு தேடி பொருட்கள் வழங்கப்படும் என்று கூட்டுறவுதுறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Good news for everyone who has a ration card! Find out immediately..! Tamil Nadu Government Official Announcement at www.tn.gov.in

RECENT POSTS IN JOBSTAMIL.IN