
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வரும் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்க தமிழக அரசு உணவுப்பொருட்கள் வழங்கல் துறை உத்தரவிட்டு உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு சேர்ந்து ஏழை எளிய மக்களுக்கு புழுங்கல் அரிசி, கோதுமை, பச்சரிசி போன்றவற்றை இலவசமாகவும் அதோடு சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு போன்றவற்றை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம்.
ALSO READ : விஜய் நடிக்கும் தளபதி 68 | லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏற்கனவே விநியோகம் செய்யப்படும் பொருட்களுடன் துவரம் பருப்பு மற்றும் 1 பாக்கெட் பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.
தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வரும் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.