கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் என ரூ.1 கோடியே 7 லட்சம் வழங்க உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்களின் கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியமைக்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் 33 ஆயிரத்து 609 ரேஷன் கடைகளில் பணிபுரியும் 20 ஆயிரத்து 712 பணியாளர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரத்து 750 வழங்க அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Also Read : மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை! அடுத்தகட்ட பணியை தொடங்கிய அதிகாரிகள்..! பெண்களே உஷாரா இருந்துகோங்க…
மேலும், இந்தத்தொகை அலுவலக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலருக்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் வரவு வைக்க பதிவாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகையை மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் சேர வேண்டிய தொகையினை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் வைக்கப்படும். அதன் பின்னர் முறைப்படி நியாய விலை கடை பணியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.