இந்திய தேர்தல் ஆணையம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தகுதி நாளாக அறிவிதுள்ளது. வருடந்தோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் போன்றவற்றிற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி 4 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நவம்பர் மாதம் 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்குதலுக்கான பணி நடைபெறும்.
இந்த சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 2023 ஜனவரி 1 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கான சிறப்பு முகாம்களில் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும்,
1. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு – படிவம்-6 பூர்த்தி செய்ய வேண்டும்.
2. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க – படிவம்-7 பூர்த்தி செய்யவும்.
3. வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய – படிவம்-8 பூர்த்தி செய்யவும்.
மேலும், இந்த படிவங்கள் வரும் 6 ஆம் தேதி முதல் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
RECENT POSTS
- பிரைவேட் கம்பெனியில வேலை ரெடி! அப்ளை பண்ண நீங்க ரெடியா? தமிழகத்திலே வேலை செய்யலாம்!
- டிப்ளமோ முடிச்சிட்டு தனியார் நிறுவனத்துல வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்!
- ரேஷன் கார்டு வச்சிருக்க குடும்பத்துக்குத்தான் இந்த செய்தி! இத உடனே செய்யணுமாம்..!
- கோயம்புத்தூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை! பத்தாவது படிச்சிருந்தாலே போதுமாம்!
- தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு!