தங்கம் தென்னரசு சொல்லிய குட் நியூஸ்! டிசம்பர் ஃபர்ஸ்ட் வீக் குருப் 2 முதன்மை தேர்வு முடிவுகள்!

Good news from the Thangam Thennarasu December First Week Group 2 Main Exam Results super update
தங்கம் தென்னரசு

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகத்தான் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு நடைபெற்றது.

இந்த முதன்மை தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்கள் இருக்கும். இந்த தேர்வினை தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 51 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வெழுதினர். முன்னதாக தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கணிப்பொறி மதிப்பீட்டு ஆய்வகம் உடனே அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ALSO READ : மகளிர் உரிமைத்தொகை புதிய தகவல்! புதுசா அப்ளை பண்ண தகுதியான நபர்களுக்கு வரவு!

தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதனால் தேர்வாணையத்தில் தற்பொழுது மதிப்பீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் மீதமுள்ள பணிகள் அனைத்தும் வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு இதில் தேர்வு செய்யப்பட 6 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் மட்டுமே சுமார் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது என்றும் 2023-24 ஆம் ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்