Google Search மற்றும் Gmail புதிய அப்டேட்! உங்களுக்கு தெரியுமா!

Google New Update: உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று கூகுள் தளம், இதை பயன்படுத்தாதவர்கள் என யாரும் இருக்க முடியாது என்ற நிலை உள்ளது. கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கும் நோக்கில் அவ்வப்போது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

Google New Update Search and Gmail Storage You know
Google New Update Search and Gmail Storage You know

அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் பயன்படுத்த கூடிய கூகுளின் ஜி- மெயிலில் (GMail) ஸ்டோரேஜ் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கூகுள் மெசேஜ் ஆப்-யில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சம் அண்மையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாலே, நாம் பேசிய வார்த்தைகள் எழுத்துக்களாக மாற்றப்பட்டு மெசேஜாக மாறிவிடும். எதிர்முனையில் உள்ளவர் அதை மெசேஜாகவும் படிக்கலாம், அல்லது ஆடியோவாகவும் கேட்கலாம். அதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள் டெஸ்க்டாப்பில் மொபைல் போனை போல சர்ச் (Search) செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கூகுளைப் பொறுத்தவரையில் வாய்ஸ் மெசேஜை எழுத்துக்களாக மாற்றும் அம்சம் முக்கியமான மொழிகளுக்கு கிடைக்கிறது. ஆங்கிலத்தில் சர்வசாதாரணமாக எழுத்துமாற்றம் செய்கிறது. தமிழ் மொழிக்கும் கிட்டத்தட்ட சரியான வார்த்தைகள் வந்துவிடுவதாக கூறப்படுகிறது.

அதாவது நீங்கள் கூகுளில் சர்ச் செய்யும் போது அடுத்தப் பக்கம் (Next Page) ஆப்ஷன் இல்லாமல் அடுத்தடுத்த பக்கங்களை ஸ்ரோல் (Scroll) செய்ய முடியும். முதலில் இந்த அம்சம் மொபைல் போனில் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கணினி திரையிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here