நம்மில் பலருக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசு வேலைக்கு போக வேண்டும் என்ற கனவு இருக்கும். அரசு வேலைக்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கும் பட்சத்தில் சமுதயாத்தின் மத்தில் நம்முடைய மரியாதை, புகழ் ஆகியவை அதிகரிக்கும். அரசு வேலையின் மூலம் தன்னுடைய குடும்ப சூழ்நிலை அல்லது தன்னுடைய தலைமுறையின் நிலையை மாற்றக்கூடிய திறன் உள்ளது.
அரசு வேலை என்றாலே அனைவருக்கும் ஒரு ஆசை மற்றும் கனவு என்றே சொல்லலாம். அரசு வேலைகளில் பல்வேறு வகை உள்ளது. அரசு வேலைக்களில் உள்ள அனைத்து தேர்வுக்கு முயற்சி செய்வதை விட குறிப்பிட்ட ஒரு தேர்வுக்கு நம்மை தயார் படுத்திக்கொள்வது நல்லது. அதாவது முதலில் நாம் விரும்பகூடிய பணி எது என்பதை ஆராய்ந்து அவற்றிக்கு ஏற்ற தேர்விற்கு எவ்வாறு தயார் செய்வது என ஒரு குறிக்கோள் வைக்க வேண்டும்.
பள்ளிப்படிப்பான பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து தகுதியிற்கும் ஏற்றவாறு பல்வேறு அரசு வேலைகள், மத்திய மற்றும் மாநில அரசு வேலைகள் உள்ளது. அரசு வேலையாக இருந்தாலும் சரி தனியார் துறை வேலையாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் ஒரு தடை என்றால் அது நுழைவு தேர்வு தான். அரசு வேலையில் தேர்ச்சி பெறுவது கடினம். இருந்தாலும் கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றிப் பெற முடியும். இன்றைய பதிவின் மூலம் அரசு வேலைக்கான போட்டித்தேர்விற்கு எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
அரசு போட்டித் தேர்விற்கு தயாராவது எப்படி?
1. அரசு வேலைக்கான தேர்வு மொழிகள் (Languages)
தமிழக அரசலால் நடத்தப்படும் அனைத்து அரசு வேலைக்கான தேர்வுகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு மொழிகளில் வினாத்தாள்கள் இருக்கும். நமக்கு எந்த மொழியில் தேர்வு எழுத விருப்பம் உள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் வெற்றி பெற விரும்பினால் கடின உழைப்புடன் சரியான வழிகாட்டுதல் பெறுவது மிகவும் முக்கியமான ஒன்று. மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை உடன் தொடர்ந்து படிக்க வேண்டும். நாம் எடுக்கும் இந்த முயற்சியானது வெற்றியை தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
2. தேர்வு ஆணையங்கள் (Selection Commissions)
இந்தியாவில் பல்வேறு தேர்வு ஆணையங்கள் உள்ளது. மத்திய அரசு வேலைகளுக்கு தேர்வுகளை நடத்துவதற்கு என UPSC(union public service commission), RRB(Railway Recruitment Board), SSC(staff selection commission), IBPS(Institute of banking personnel selection) etc.. இது போன்ற இன்னும் பல தேர்வு ஆணையங்கள் செயல்படுகின்றன. மேலும் 2022-ஆம் ஆண்டு முதல் அனைத்து விதமான மத்திய அரசு பணிகளுக்கும் ஒரே தேர்வே நடத்தப்படும் என மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
மாநில அரசு பணிகளுக்கு என TNPSC(Tamilnadu public service commission), TRB(Teachers recruitment board), TNFUSRC(Tamilnadu forest Uniformed service recruitment committee), TNEB(tamilnadu electricity board) ஆகிய தேர்வு ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடைபெறும். மேற்கூறிய தேர்வுகளில் எது உங்களுக்கு ஏற்ற தேர்வு என முடிவுஎடுத்து பயிற்சி செய்து கொள்வது நல்லது.
ALSO READ >வீட்டில் இருந்தே ஆன்லைன் வேலை பாக்குறீங்களா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ…
3. இடைவிடாமல் கற்க வேண்டும் (Keep Reading)
மேற்கண்ட தேர்வுகளில் நமக்கு எது பொருந்தும் என ஆராய்ந்த பின்னர் அந்த தேர்விற்கு தங்களை தயார் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு வைத்து கொள்ளுதல் வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு 6-7 மணி நேரம் படிக்க வேண்டும். உங்களுக்கு எந்த நேரத்தில் எதை படித்தால் அது மனதில் பதியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தூக்கம் வரும் பொழுது எதை படித்தால் அந்த தூக்கம் நீங்கும் என அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். மேலும் முந்தைய ஆண்டு வினாத்தாள் மற்றும் மாதிரி வினாத்தாள் என அவற்றையும் பயற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் எந்த பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியும் அதற்கு ஏற்ப நமது திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
4. படிப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தல் (Full Time Study)
தேர்வுக்கு தயார் செய்வது என்று நினைத்துவிட்டால் அதில் தங்களை முழுமனதோடு ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட வேண்டும். தேர்வுக்கு தயார் செய்யும் போது வேற எந்த செயல்களிலும் ஈடுபட கூடாது, ஒரு செயலை கையில் எடுத்துவிட்டால் அவற்றில் தான் முழு முயற்சியும் இருக்க வேண்டும். சிலருக்கு அரசு வேலையில் நுழைய வேண்டும் என எண்ணம் இருந்தாலும் அதை கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆரம்பிக்கலாம் என எண்ணம் இருக்கும் அவ்வாறு இல்லாமல் கல்லூரி காலத்திலே அவற்றிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். உங்கள் பலம் மற்றும் பலவீனம் அவற்றை அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள். எந்த ஒரு வேலைக்கும் மிக முக்கியமான விஷயம் கடின உழைப்பு மற்றும் முழு மன உறுதி உடன் ஒரு வேலையை தொடங்கினால் அது நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- பத்தாவது (10th) படித்தவரா நீங்க? உங்களுக்குத்தான் ரயில் சக்கர தொழிற்சாலையில் 192 வேலைகள் அறிவிப்பு!
- Secure Your Future with Odisha Police Recruitment 2023: 200 Jobs with a Salary Up to Rs.29,750/-PM | Apply Soon…
- Jobs Opening for Various Posts in NFDC Recruitment 2023 | Monthly Salary Rs.1,00,000/- | Apply Now @ www.nfdcindia.com
- 10th Pass Join the Jharkhand Home Defense Corps: 1478 Vacancies Open for 2023 – Apply Online at dhanbad.nic.in…
- 12th, 8th படித்தவர்களுக்கு தமிழக அரசில் 75 பணிகள் அறிவிப்பு! மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம்!