அரசின் புதிய அறிவிப்பு! அங்கன்வாடிக்கு வந்த புதிய உத்தரவு!

அங்கன்வாடி
அங்கன்வாடி

கேரளா மாநிலத்தில் அங்கன்வாடியில் மூன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய பள்ளி அனுபவங்களுக்காக மற்றும் சத்துணவு திட்டத்தில் மூன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அங்கன்வாடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து தற்போது கேரளா மாநிலத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது.

ALSO READ : நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அந்த அறிவிப்பின் படி உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடியில் ஒரு குழந்தைக்கு செலவிடப்படும் ஒருநாள் தொகை ரூ.இரண்டிலிருந்து ரூ.ஐந்தாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து சரக்குகளை விநியோகிப்பதற்கு ஒரு கிலோவிற்கு வழங்கப்பட்ட போக்குவரத்து செலவு 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட 50 பைசாவில் இருந்து தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.

அதோடு இந்த விலை ஏற்றம் மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை மொத்தம் 33,115 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. மேலும் இந்த அங்கவாடி மூலம் 3 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மொத்தம் 3,28,157 பேர் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த குழந்தைகளுக்கு காலையில் லேசான சிற்றுண்டி மதியம் 12.30 மணிக்கு கஞ்சி, பருப்பு அல்லது சாதம் மாலையில் உப்புமா அல்லது பயறு வகைகள் வாரத்தில் இரண்டு முறை பால் மற்றும் முட்டை ஆகியவற்றை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதோடு கேரள அரசின் இந்த புதிய ஏற்பாடுகள் மக்களிடையே பாராட்டுகளை பெற்று உள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்