தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இராயப்பேட்டை, சென்னை – 14
வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பரம் அறிவிப்பு
சென்னை-14, இராயப்பேட்டை, அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடத்திற்கு தகுதியுள்ள இந்து மதத்தினைச் சார்ந்த நபர்கள் 23.08.2022 முதல் 22.09.2022 வரை அலுவலக நாட்களில் காலை 10.10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
வ.எண் | பணியிடத்தின் பெயர் | ஊதிய விவரம் | காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை |
---|---|---|---|
1 | ஓதுவார் | PAY MATRIX – 13 12600-39900 அடிப்படை சம்பளம் | 1 |
கூடுதல் | 1 |
தகுதிகள்:
1. தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
2. சமய நிறுவனங்களால் அல்லது நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப்பாட சாலையில் இதன் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர் 01.08.2022 அன்று 18 வயது முழுமையடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பணியிட விவரங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை – 14 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 22.09.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.
ஆர்.ஹரிஹரன்
தக்கார் / துணை ஆணையர் / நகை சரிபார்ப்பு அலுவலர்,
சென்னை – 04
கோ.முரளிதரன்
செயல் அலுவலர்
RECENT POSTS:
- IIT மெட்ராஸில் சூப்பரான வேலை! மாதம் ரூ.40000 முதல் ரூ.60000 வரை சம்பளம் வழங்கப்படும் @ www.iitm.ac.in
- திருப்பதி செல்லும் பக்தர்களா நீங்க.. இதோ உங்களுக்காக சூப்பர் குட் நியூஸ்..!
- இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத போறீங்களா.. அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…
- போச்சுடா..! பெண்கள் பேருல இது இருந்தாலும் மாசம் 1000 ரூபாய் கிடையாதாம்! வெளியான புது தகவல்!