பொங்கல் பண்டிகைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!

Governor RN Ravi congratulates Pongal festival-Tamil Nadu Governer For Pongal Wishes

Pongal 2023: தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை என்று தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ,”பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here