தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த கிராம சபை கூட்டம் குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, உலக நீர் தினமான மார்ச் 22, உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய நாள்களில் அந்தந்த கிராமங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி (நாளை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதால் தமிழக அரசு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படம் கிராம சபை கூட்டத்தில் துரையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் வகையில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, விவசாயிகளுக்கு புரியும் வகையில் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்படும் வகையில், விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில், நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதேபோல், நவம்பர் 1 ஆம் தேதி நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தில், அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பின் வேளாண் – உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அனைத்து விவசாயிகளும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் தமிழக வேளாண் துறை குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!
- வேளாண் பட்ஜெட் திட்டங்கள் : நடிகர் கார்த்தி வெளியிட்ட டுவீட்