மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! 10வது பாஸ் ஆனவர்கள், பெயில் ஆனவர்கள், பிளஸ் 2, டிகிரி படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்!

வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையாவது:-

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நடந்து கொண்டு இருக்கிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது, வரும் 26 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறப் போகிறது. இந்த முகாமில் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு கணினி இயக்குபவர், மேலாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கணக்காளர், ஏரியா மேனேஜர். டீம் லீடர், சூப்பர்வைசர், காசாளர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு, தட்டச்சர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண்கள், பெண்கள் பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here