சேலத்தில் “வந்தே பாரத்” ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு – பிரதமர் மோடி பாராட்டு

Great reception for Vande Bharat train in Salem - PM Modi praised

சென்னையில் இருந்து கோவைக்கு அதிவிரைவு ரயில் வந்தே பாரத் சேவையினை பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் எம்எல்ஏக்கள், ரயில்வே அதிகாரிகள், டெல்லி மற்றும் சென்னை பத்திரிகையாளர்கள் பயணம் செய்தனர்.

சேலம் மற்றும் ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய ரயிலை மலர் தூவி வரவேற்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர் ஐ. சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கௌதம், இளைஞர் அணி பொதுச் செயலாளர்கள் காளிமுத்து என்ற கவுதம், கலைச் செல்வன், பொருளாளர் ராசி எஸ்.கிரிதரன் உள் பட பலர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் முதலாவது நடை மேடைக்கு வந்தது. அப்போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். இதனை பார்த்த பிரதமர் தனது டிவிட்டர் பதிவில் “வந்தே பாரத் ரயிலுக்கு சேலத்தில் அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN