பாதுகாப்பு படை வீரர்களுக்கு வாழ்த்து- பிரதமர் மோடி

Greetings to the Defense Forces PM Modi Border Security Force Day PM Modi Wishes 1

கடந்த 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காக எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டின் சர்வதேச எல்லைகளை பாதுகாப்பதில் இப்படை முக்கிய பங்காற்றி வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட செய்திகுறிப்பில், இந்திய எல்லை பாதுகாப்புப் படை உருவானதன் 49-வது எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நமது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினத்தன்று நான் நமது வீரர்களை வணங்குகிறேன்.

நம்மை அமைதியாக வாழ செய்ய அவர்கள் எல்லையில் கடுமையான பணியை மேற்கொள்கின்றனர். அவர்களது அயராத உழைப்பும் பண்பும் அவர்களை எப்போதும் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவும், நம்மை ஊக்குவிப்பதாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயற்கை பேரழிவுகள் போன்ற சவாலான சூழ்நிலைகளின் போது எல்லை பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் உன்னதமான பணியை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here