தமிழகத்தில் இன்று குரூப்1 தேர்வு : 92 பணியிடங்களுக்கு 3.16 லட்சம் பேர் போட்டி!

0
Group 1 exam today in Tamil Nadu

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழ் நாட்டில் உள்ள அரசு காலிபனியிடங்களை நிரப்ப உள்ளதாக உள தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு இன்று(சனிக்கிழமை) நடைபெருகிறது. இந்த தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியுள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப்-1 தேர்வில் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. இந்த மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பின் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இன்று நடைபெறும் குரூப்-1 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வெழுதும் தேர்வர்கள் இதற்கான விதிமுறைகள் குறித்து ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று டி.என்.பி.சி தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here