குரூப் 2 தேர்வு முடிவுகள் : சற்றுமுன் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Group 2 exam results An important announcement released by Minister Thangam Tennarasa just now

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பதவிகளில் 121 காலிப்பணியிடங்களும், குரூப் 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 097 காலிப்பணியிடங்களும் உள்ளதாக TNPSC அறிவிப்பை வெளியிட்டது. இந்த காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளையும் TNPSC வெளியிட்டது.

இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 52 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிந்த 10 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளிவராததால் தேர்வு எழுதிய பட்டதாரிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

ALSO READ : சென்னை மெட்ரோவில் வெறும் ரூ.5 மட்டும் கொடுத்தா போதும்! ஊரையே ஒரு சுத்து சுத்தாலம்..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தொல்லியல் துறையின் நிகழ்ச்சியில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அப்பொழுது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியாகும். மேலும் காலதாமதத்திற்கான காரணம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிடும் என்று தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top