குரூப்-4 தேர்வு… டிஎன்பிஎஸ்சி கொடுத்த விளக்கம்!!

Group-4 Exam Explained by TNPSC

அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலம் தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் அந்தந்த தகுதிக்கேற்ப பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் 24 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட இந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ஒரே மையத்தில் தேர்வெழுதிய அதிக தேர்வர்கள் தேர்வாகி இருப்பதால் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தற்பொழுது இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும். கடந்த காலங்களிலும் தட்டச்சர் பிரிவில் காஞ்சிபுரம் மற்றும் சங்கரன் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரே பகுதியில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றதால் டிஎன்பிஎஸ்சியில் முறைக்கேடு இருப்பதாக கூறுவது தவறானது. எனவே குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறாகும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN