கெஜ்ரிவாலின் புதிய அறிவிப்பு! ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் @ குரூப் பி, குரூப் சி பணியாளர்களுக்கு…

Group B, Group C Employees news for you Kejriwal new announcement Rs.7 thousand Diwali Bonus
Diwali Bonus

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கொண்டடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், பட்டாசுகள்தான். ஆனால், நிறுவனங்களிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ வேலை செய்யும் பணியாளர்களின் நினைவிற்கு வருவது தீபாவளி போனஸ்.

ALSO READ : தீபாவளி 2023 : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்! கட்டண சேவைகள் ரத்து!

இந்த தீபாவளி போனஸானது தனியார் நிறுவன பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு துறை சார்ந்த பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது தீபாவளி நெருங்கி வருவதால் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸ் குறித்த செய்தி எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் அவர்கள் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து டெல்லி அரசின் கீழ் பணியாற்றக் கூடிய தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், குரூப் பி பணியாளர்கள் மற்றும் குரூப் சி பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இதற்காக 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதன் மூலம் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்