மீண்டும் ஹாரரில் மிரட்ட வரும் ஹன்சிகா… வெளியானது கார்டியன் மூவி டீசர்…!

மீண்டும் ஹாரரில் மிரட்ட வரும் ஹன்சிகா... வெளியானது கார்டியன் மூவி டீசர்...!
மீண்டும் ஹாரரில் மிரட்ட வரும் ஹன்சிகா… வெளியானது கார்டியன் மூவி டீசர்…!

தமிழ் சினிமாவுல ஜெயம் ரவிக்கு ஜோடியா எங்கேயும் காதல் படத்துல ஹீரோயினியா அறிமுகமானவங்க தான் நடிகை ஹன்சிகா மோத்வாணி. அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் இந்த மாதிரி படத்துல நாயகியா நடிச்சிருக்காங்க. அதுவும் விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு இப்டி பெரிய முன்னணி நடிகருங்க கூட ஜோடியா நடிச்சி அசத்திருக்காங்க. சமீபத்தில தான் அவரோட பாய் பிரெண்ட காதலிச்சி கல்யாணுமும் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கு அப்றமும் பார்ட்னர் படம், வெப் சீரிஸ்லயும் தொடர்ந்து நடிச்சிட்டு இருந்தார்.

இந்த நிலையில, டைரக்டர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில உருவாகுற கார்டியன் படத்துல ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்தோட ஷூட்டிங் எல்லாமே முடிஞ்சிருச்சி. இதுக்கான பின்னணி வேல தான் இப்ப நடந்துக்கிட்டு இருக்குது. ஏற்கெனவே சுந்தர் சி எடுத்த அரண்மனை படத்தில ஹன்சிகா பேயா நடிச்சிருப்பார். அதே மாதிரி இந்த படத்திலயும் பேயா நடிச்சி எல்லாரையும் பயமுறுத்தியிருக்கிறார்.

Also Read >> லியோ பட வெற்றி விழா | இதெல்லாம் இல்லனா உள்ள போக அனுமதி இல்லையாம்! உடனே பாருங்க!

அதுமட்டுமில்ல, கார்டியன் படத்தோட டீசர் இன்னைக்கி தான் வெளியாகிருக்கு. இந்த டீசர்ல பேயா வர ஹன்சிகா நம்மள ரொம்பவே மிரட்டியிருக்கிறார். இப்போ இந்த டீசர் இணையத்தில செம்ம டிரெண்டா பரவி வருது.