ஹேப்பி கிறிஸ்துமஸ்னா என்ன? மெர்ரி கிறிஸ்துமஸ்னா என்ன? வாங்க பாக்கலாம்..

Happy Christmas And Merry Christmas Details In Tamil

இந்தியாவில் உள்ள கிறிஸ்த்துவர்களுக்கு மிகப்பெரிய பண்டிகை என்றாலே அது கிறிஸ்துமஸ் பண்டிகை தான். ஒவ்வொரு ஆண்டும் வருடத்தின் கடைசி மாதத்தில் வரும் பண்டிகை என்பதால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் நாள் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் தினம் நெருங்கி வரும் காரணத்தால் எங்கு பார்த்தாலும் திருவிழாக்கள், கலை கொண்டாட்டாங்களையும் காண முடிகிறது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக உலகில் உள்ள மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த இனிய நாளில் மக்கள் தேவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த இனிய நன்னாளில் நாம் அனைவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அப்பொழுது ஒருவருக்கொருவர் ஹாப்பி கிறிஸ்துமஸ் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் என கூறி கொள்ளவோம். ஏன் அனைவரும் ஹாப்பி கிறிஸ்துமஸ் அல்லது மேரி கிறிஸ்துமஸ் என்ற இரு வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்? ஹாப்பி என்ற வார்த்தைக்கும் மேரி என்ற வார்த்தைக்கும் அப்படி என்ன தான் வேறுபாடு உள்ளது என்று அறிந்துகொள்வோம் வாருங்கள் ….

மேரி அல்லது மெர்ரி கிறிஸ்துமஸ் விளக்கம்:

Merry Christmas

மேரி என்பது ஒரு ஆங்கில வார்த்தை ஆகும். இந்த ஆங்கில வார்த்தையான மேரி பண்டைய ஜெர்மானிய மற்றும் ஆங்கில வார்த்தைகளின் கலவையாகும். மேரி என்ற சொல்லிற்கு ஆசிர்வதிக்கப்பட்டவர் அல்லது மகிழ்ச்சி என்பது பொருள். மேரி என்பதன் எளிய பொருள் மகிழ்ச்சி என்று கூறப்படும். இதன் காரணமாகவே பல நாடுகளில் ஹாப்பி கிறிஸ்துமஸ் என்ற வார்த்தைக்கு பதிலாக மேரி கிறிஸ்துமஸ் என்பதை பயன்ப்படுத்துகின்றனர்.

ALSO READ >கிறிஸ்துமஸ் ரம் கேக் செய்வது எப்படி?

ஹேப்பி என்ற சொல் மேரி என்று மாறியதற்கு காரணம்:

16-ஆம் நூற்றாண்டில் தான் மேரி என்ற வார்த்தை நடைமுறையில் வந்தது என்று தெரிகின்றது. அப்பொழுது தான் ஆங்கில மொழியின் தொடக்க காலக்கட்டமாக இருந்தது. மேரி என்ற இந்த வார்த்தை 18 மற்றும் 19 நூற்றாண்டில் இந்த மேரி என்ற வார்த்தை பிரலமாகிவிட்டது. பின்னர் மக்கள் அனைவரும் ஹாப்பி என்ற சொல்லிற்கு பதிலாக மேரி என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கி விட்டனர். மேரி என்ற சொல்லிற்கு மகிழ்ச்சி என்பது பொருளாகும்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று மேரி என்ற வார்த்தை உபயோகப் பயன்படுத்துவதன் நோக்கம்:

மிகவும் பிரபலமான எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் என்பவர்தான் மேரி என்ற வார்த்தைக்கு அடித்தளம் போட்டவர். இவரின் மூலம் தான் மேரி என்ற வார்த்தை புகழ் பெற்றது. இவருடைய ‘எ கிறிஸ்துமஸ்’ என்ற புத்தகத்தில் மேரி என்ற சொல்லை பயன்பத்தினார். இவர் இந்த வார்த்தையை பயன்படுத்தியதால் மக்கள் அனைவரும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். பின்பு உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஹாப்பி கிறிஸ்துமஸ் என்ற சொல்லிற்கு பதிலாக மேரி கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். பின்னர் இதுவே வழக்கத்தில் வந்து விட்டது.

மேரி கிறிஸ்துமஸ் எந்தெந்த நாடுகளில் பயன்படுத்துவதில்லை?

Happy Christmas

மேரி என்ற சொல் சில நாடுகளில் புகழ் பெற்று விளங்குகிறது. மேரி கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தினாலும் இன்றும் சில நாடுகளில் மேரி என்ற சொல் வழக்கத்தில் வரவில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் மேரி என்ற வார்த்தை பயன்படுத்துவதில்லை. இங்கிலாந்து நாடுகளில் வாழும் மக்கள் இன்றும் ஹாப்பி கிறிஸ்மஸ் என்ற வார்த்தையை உபோயகப் படுத்துகின்றனர். ஹாப்பி மற்றும் மேரி என்ற இந்த இரண்டு சொல்லிற்கும் ஒரே அர்த்தம் தான். என்ன தான் ஒரே அர்த்தம் என்றாலும் இங்கிலாந்து மக்கள் ஹாப்பி கிறிஸ்துமஸ் என்ற சொல்லையே விரும்கிறார்கள்.

ஹாப்பி கிறிஸ்துமஸ் என்ற சொல்லோ அல்லது மேரி கிறிஸ்துமஸ் என்ற சொல்லோ நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதின் ஒரே நோக்கத்தையே குறிக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here