Home NEWS கலெக்டர் கார்மேகம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி! 8TH, 10TH, 12TH, ITI, DIPLOMA, DEGREE படித்தவர்களுக்கு...

கலெக்டர் கார்மேகம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி! 8TH, 10TH, 12TH, ITI, DIPLOMA, DEGREE படித்தவர்களுக்கு 40 ஆயிரம் புதிய பணியிடங்கள்!

0
Happy news announced by Collector Karmegam

சேலம் மாவட்டத்தில் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமினை சேலம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் போன்றவை இணைந்து நடத்துகின்றனர். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் போன்றவை இணைந்து நடத்தும் இந்த சிறப்பு முகாமானது சேலத்தில் உள்ள பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 26.11.2022 அன்று நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாமின் மூலம் ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை பணியாளார்கள் தேர்வு செய்துகொள்ளாலாம். சேலத்தில் நடைபெறும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் சுமார் 40,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும், மேலும் இதில் 20,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பர்ர்க்கபப்டுகிறது. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டபடிப்பு முடித்தவர்கள் வரை உள்ள அனைத்து இளைஞர்களும் கலந்துகொள்ளலாம்.

சேலத்தில் நடைபெறும் இந்த மாபெரும் சிறப்பு முகாம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை பற்றி விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே, இந்த பணிக்காலியிடங்களுக்கு தொழில் நிறுவனங்களும், வேலைவாய்பில்லாத இளைஞர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார்.


RECENT POSTS IN JOBS TAMIL:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here