ரேஷன் கடைகள் மூலமாக எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை மக்கள் அனைவரும் பெற்று வருகிறார்கள். தமிழக அரசின் புதிய புதிய திட்டங்கள் இந்த ரேஷன் கடைகள் மூலமாக தான் மக்களை சென்றடைகிறது. மக்களுக்கு அனுதினமும் தேவைப்படுகிற அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசியமான பொருட்கள் எல்லாம் ரேஷன் கடைகளில் கிடைக்கிறது. கடந்த மாதம் கோதுமை பற்றாக்குறையால் அனைவராலும் கோதுமை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக தான் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 96 லட்சம் முன்னுரிமை, 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை (3 கிலோ) இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இந்த மாதம் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மாதம் கோதுமை ஒதுக்கீட்டை 1038 டன்னாக மத்திய அரசு குறைத்ததால் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க முடியவில்லை. இதனால் தற்போது, மீண்டும் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது.