ஆசிரியர்களுக்கு ஐகோர்ட்டு சொன்ன மகிழ்ச்சியான செய்தி..! உடனே பாருங்க…

Happy news for the teachers dont miss and Watch now

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசானது, கடந்த 2009-ஆம் ஆண்டின்போது, கொண்டு வந்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசானது 2011-ஆம் வருடத்தின்போது ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 60% மதிப்பெண்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் தமிழக பள்ளிக்கல்வித் துறையானது, ஆசிரியர் தகுதித் தேர்வில் 2011 ஆம் வருடத்திற்கு முன்பாக நியமனம் செய்யப்பட்டிருந்த ஆசிரியர்கள், வெற்றிபெறவில்லை என அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கானது தனி நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அப்போது விசாரித்த நீதிபதி இவ்வழக்கை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து அவ்வாறு உள்ள ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும் அவர்கள் பணியில் நீடிக்க தகுதி இல்லை என்றும் கூறி அப்போது உத்தரவிட்டுருந்தார். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கலானது.

இவ்வழக்கானது, இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை என்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்றும் தீர்ப்பு அளித்தனர். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதித்தேர்வில் கடந்த 2011-ஆம் வருடத்திற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இவ்வாறு நீதிபதிகள் இவ்வழக்கு விசாரணையின்போது மிகத் தெளிவாக கூறினார்கள்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN