தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் அவர் பேசியது ” மண்ணெண்ணெயின் அளவு 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தி மீனவர்களுக்கு வழங்கப்படும். மேலும் 45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

முன்னதாக மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5000 ஆக இருந்து. ஆனால், தற்போது ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார். அதன்பிறகு, மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா தரப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
Also Read : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் திடீர் முடக்கம்..! இதுதான் கரணம்!!
மேலும், விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000 லிட்டர் வழங்கப்பட்ட நிலையில், தற்பொழுது 1,000 லிட்டர் அதிகரித்து 19,000 லிட்டர் வழங்கப்படும் என்று கூறினார். படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.