தமிழகத்தில் எப்போதும் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவடைது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் அக்டோபர் 29 ஆம் தேதியே தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 3 நாட்களாகவே சென்னையில் கன மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையால் ஆதிக இடங்கள் பாதிக்கப்பட்டது. அப்ப்போது முதல் அமைச்சர் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை மழைநீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மழைநீர் தேங்காமல் இருக்க அதிக வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் அறிவுறுத்தல் படி மழைநீர் வடிகால் பணிகளை முக்கியமான பணிகளாக மேற்கொள்ளப்பட்டது. 95 சதவீத வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இனி பாதிப்பு இருக்காது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வெள்ளத்தினால் சென்னை அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது என தெரிவித்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி மழைநீர் வடிகால் பணிகளை முக்கியமான பணிகளாக மேற்கொண்டதற்கு ‘நல்ல பலன்’ கிடைத்துள்ளது எனவும் இதற்கு பின் மழையினால் அதிக அளவு பாதிப்பு இருக்காது என நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.