மோர்பி தொங்கு பாலம் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Harrowing CCTV footage of Morbi suspension bridge accident 140 dead-Morbi Suspension Bridge CCTV Footage

குஜராத் மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுக்கும் மேலாக பழமை வாய்ந்த பாலம் உள்ளது. இந்த பாலம் குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் சிதிலம் அடைந்து காணப்பட்டது.

இந்நிலையில், அந்த பாலத்தினை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த சீரமைப்பு பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. குஜராத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி இந்த பாலம் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த பாலத்தினை பார்க்க விடுமுறை நாளான நேற்று (30/10/2022) ஏராளமான மக்கள் திரண்டனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாலத்தின் மீது நின்றனர். அனைவரும் மகிழ்ச்சியாக பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், பாலம் திடீரென அறுந்து விழுந்தது.

இந்நிலையில், பாலத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தகவல் தெரிவித்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 15 மணி நேரத்திற்க்கும் மேலாக நடந்த மீட்பு பணியில் இதுவரை 140க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கபட்டு உள்ளதாகவும் 400 க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இதற்கான மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here