நீங்களும் பேங்க்ல கடன் வாங்கிருக்கீங்களா..? அப்போ RBI அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு தேவையை பூர்த்தி செய்ய தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கடன்களை வாங்கி வருகின்றனர். மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் வங்கியில் கடன் வாங்கும்பொழுது அதற்கு வசூலிக்கப்படும் வட்டி குறைவு என்பதால் அதிகப்படியான மக்கள் வங்கியில் கடன் வாங்கி வருகின்றனர்.

Have you also taken a loan from the bank Then the new notification announced by RBI is for you watch now

இந்நிலையில், தற்பொழுது பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் குறித்த தேதியில் வட்டி செலுத்தவில்லை என்றால் அதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. வங்கிகளில் ஏற்படும் இத்தகைய புகார்களை தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி(RBI) உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, வங்கியில் இருந்து வாங்கப்பட்ட கடன்களை வசூலிக்கும்போதும் அல்லது வட்டி வசூலிக்கும்போதும் கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

Also Read : வெறும் 4 மணி நேரத்திலேயே சென்னை டு பெங்களூரு போகலாமா..? ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

மேலும், தவணை தொகை அல்லது செலுத்தும் கால அளவை வாடிக்கையாளர் விருப்பப்படி மாற்ற அனுமதிக்கவேண்டும் எனவும் அபராதம் என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்காமல் விதிமுறைகளுக்கு உட்பட்ட அளவிலேயே வசூலிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.