இந்தியாவில் ஆதார் கார்டு என்பது ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு இல்லையென்றால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவிற்கு முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் கார்டை இணைத்தல், பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்தல் ஆகிவற்றை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அந்த அளவிற்கு முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாமல் பயந்து கொண்டே இருப்பார்கள். இனி பயப்பட தேவையில்லை. ஏனென்றால் ஆதார் கார்டு தொலைந்து விட்டால் இனி ஈஷியாக பெறலாம். ஆதார் கார்டு தொலைந்து விட்டால் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக எளிதாக பெற்று கொள்ளலாம்.
Also Read : வெற்றி! வெற்றி! சந்திராயன் 3 விண்கலம் பற்றி இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அதற்கு முதலில் தொலைந்து போன ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இவை இரண்டும் தான் முக்கியம். UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து ஆதார் கார்டை மீட்டெடுத்து விடலாம். எனவே, இனி ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலை இல்லை ஈஸியா வாங்கிக்கலாம்!