உங்க மொபைல் போனும் காணாமல் போயிருச்சா? இனி கவலை வேண்டாம்… ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்..! மத்திய அரசின் புதிய அறிவிப்பு உங்களுக்காகவே!

Have you lost your mobile phone Worry no more Easy will find out Central governments new notification is for you full details here dont miss read it

இந்தியாவில் தினம்தோறும் மொபைல் போன் திருடுபோவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த செல்போன்கள் திருடுபோவதின் மத்தியில் மத்திய அரசு அதற்கு ஒரு தீர்வை கண்டுபிடித்திருக்கிறது. அதாவது திருடப்பட்ட அல்லது காணாமல் போயிருக்கும் செல்போனை கண்டுபிடிப்பதற்கான ஒரு புதிய நுட்பமாக CEIR என்கிற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. இந்த CEIR என்கிற தொழில்நுட்ப வசதியின் மூலமாக திருடப்படும் அல்லது காணாமல் போயிருக்கும் தொலைபேசியை மிக எளிமையான முறையில் பிளாக் செய்யப்பட்டு ட்ராக் செய்து தருகிறது.

அதுமட்டுமல்லாமல் இது காவல் துறை உதவியுடன் புகார் அளிக்கப்பட்டிருந்த 24 மணி நேரத்திற்குள் அதன் அனைத்து விவரங்களையும் பதிவு செய்தல் அவசியம். அதாவது திருடப்பட்ட இடம் அல்லது காணமல் போன இடம், தொலைபேசி எண், IMEI எண் மற்றும் மொபைல் மாடல் ஆகிய அனைத்து தகவலையும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னதாக CEIR என்கிற இணைய சேவையில் காணமல் அல்லது திருடப்பட்ட தொலைபேசினுடைய FIR நகலை பதிவு செய்தல் வேண்டும்.

அதைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தொலைந்த செல்போனை பிளாக் செய்யப்பட்டு ட்ராக் செய்யப்படுகிறது. அதற்குப் பின்னர் காவல் துறை உதவியுடன் தொலைந்த இடத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தருகின்றது. இப்புதிய தொழில் நுட்ப வசதியானது வரும் மே – 17 முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மக்கள் சாலைகள் மற்றும் வெளியிடங்களில் நிம்மதியுடன் நடமாட வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாது சமீபத்தில் கிட்டத்தட்ட 2,500 க்கும் அதிகமான தொலைந்த மற்றும் காணமல் போன செல்போன்களை எல்லாம் CEIR தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மீட்டு அதற்குரியவர்களிடம் ஒப்படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN