படிச்சிட்டு இருக்கீங்களா? உங்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை தராங்களாம்..! உடனே அப்ளை பண்ணுங்க!

0
Have you read Tamilnadu government will give you scholarship Apply now-Scholarship For Higher Education

தமிழக அரசு மாணவ, மாணவியர்களின் கல்விக்காக பல்வேறு நலதிட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகையை அளித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு உயர்கல்விக்கான உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியுள்ள மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை உயர்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் பெற்று கொள்ளாலாம். இதற்கான விண்ணப்பங்களை பெற்று விண்ணபித்து உதவித்தொகையை பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வழங்கும் இந்த உயர்கல்வி உதவித்தொகைக்கு அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனை விண்ணப்பிக்க மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும், புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 6.12.2022க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அணுக வேண்டும். மேலும், அரசு இணையதளம் www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm scholarship.schemes -ல் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here