18 வயது ஆகிவிட்டதா? அப்ப உடனே இத செய்யுங்க…!மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு!

0
Have you turned 18 Then do this immediately District Collector Notification-A Special Camp For Voter List

வருடந்தோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் போன்றவற்றிற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்பு முகாம் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கான சிறப்பு முகாம்களில் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு – படிவம் 6-யை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க – படிவம் 7-யை பூர்த்தி செய்யவும். வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய – படிவம் 8-யை பூர்த்தி செய்யவும்.

இந்நிலையில், இந்த படிவங்களை பூர்த்தி செய்து வருகின்ற டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் படிவங்கள் அளிக்கலாம். இந்த சிறப்பு முகாம் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் நடத்த தேர்தல் ஆணையத்தால் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here