ஹெல்த் டிப்ஸ் : திரும்ப திரும்ப இந்த 5 வகையான உணவுகளை சூடாக்கி சாப்பிடாதீங்க..! Health Tips in Tamil

health tips in tamil
health tips in tamil

மனைவிகள் வேலைக்கு செல்வதாலும், திரும்ப திரும்ப சமைக்க வேண்டுமா என்ற எண்ணத்தாலும் தினமும் ஒரு வேலை மட்டுமே சமைக்கிறார்கள். இதனை மதியத்திலும், இரவிலும் சூடு படுத்தி சாப்பிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், சாப்பாடு மற்றும் குழம்பு மீந்து விட்டால் அதை வீணடிக்க கூடாது என்ற காரணத்தால் ப்ரிட்ஜில் வைத்து மறுநாளும் சூடுபடுத்தி சாப்பிடுகிறார்கள். இன்னும் ஒரு சிலர், ஒரு படி மேலே போய் தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் போது அதையே சூடுபடுத்தி குடுத்து அனுப்புவார்கள்.

இந்த மாதிரி சாப்பாட்டை சூடுபடுத்தி சாப்பிட்டு வருவதால், சாப்பாட்டில் உள்ள சத்துக்கள் பாதியாக குறைந்து விடுகிறது. மேலும் நம் உடம்பை பாதிக்க கூடிய நோய்கள் வர காரணமாகவும் உள்ளது. இதனால் திரும்ப திரும்ப உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதை தவிருங்கள்.

ஹெல்த் டிப்ஸ் தமிழ்

சமையல் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெயில் வறுக்கும் உணவுகள்

சமையல் எண்ணெய்
  • சமையல் எண்ணெய்யில் பொறிக்கப்படும் அல்லது வறுக்கப்படும் இறைசிகள், மீன், பொரியல்கள் மீண்டும் சூடாக்கி சாப்பிட கூடாது
  • ஒருமுறை பயன்படுத்தின எண்ணெய் மறுபடியும் பயன்படுத்த கூடாது. இப்படி பயன்படுத்துவதால் HYDROGENATION ஏற்பட்டு TRANS FAT உருவாக காரணமாக அமைகிறது.

கீரைகள் – காய்கள்

கீரைகள் – காய்கள்
  • கீரை வகைகள், பீன்ஸ், கேரட் போன்றவற்றை ஒரு போதும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.
  • இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதால் கல்லீரலில் கேஸ் ட்ரபுள் உருவாக்கி, வயிற்றுக்குள் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.

ALSO READ : ஒரு வரி தத்துவம்

சோறு

சோறு
  • சோறு எல்லார் வீடுகளிலும் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஒரு உணவு. ஒரு வேலை மட்டும் சமைத்து விட்டு மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடும் அநேகர் இன்றும் இருக்கிறார்கள்.
  • இப்படி சோறை சூடாக்கி சாப்பிடுவதால், BACILLUS CEREUS எனப்படுகிற பாக்டீரியா புட் பாய்சன் உண்டாக்கி, வாந்தியும் ஏற்பட வைக்கிறது. தலை சுற்றல், அஜீரணம், வயிற்றுபோக்கு என பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு
  • உருளைகிழங்கில் பாக்டீரியாக்களுக்கு பிடித்த ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால், பாக்டீரியாக்கள் அதிகளவில் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதிலிருந்து வரும் CLOSTRIDIUM POISONING நம்முடைய நரம்புகளை பாதிக்க செய்கிறது.

ALSO READ : தன்னம்பிக்கை வரிகள்

முட்டை

முட்டை
  • ஒருமுறை சமைத்த முட்டையை மறுபடியும் சூடாக்கி சாப்பிடும்போது ருசி மாறுவதுடன் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது.

மேற்கூறிய உணவுகளை திரும்ப திரும்ப சூடாக்கி சாப்பிடுவதால் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, உங்கள் உடல் நலனில் அக்கறையுடன் செயல்படுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top